இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இலங்கை அரசின் அழைப்பை ஏற்று இம்மாத இறுதியில் பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ளார்.கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லி வந்த இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது இலங்கைக்கு வருமாறு அவர் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இருநாட்டு மக்களுக்கும் இடையே உள்ள நட்புறவை பலப்படுத்தி சுற்றுலா கலாசாரம் பண்பாடு ஆகிய துறைகளில் வளர்ச்சி காண வேண்டும் என்று இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.பௌத்தம், ராமாயண சுற்றுலா பற்றியும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.இம்மாத இறுதியில் மோடி இலங்கை செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில் நீண்ட காலமாக தீராத தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர் மறுவாழ்வு பிரச்சினைகள் குறித்து அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

^