கந்துவட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை: திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி எச்சரிக்கை:(Exclusive)

திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் கந்துவட்டி வசூலிக்கும் நபர்கள் அவ்வப்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.எனினும் கந்துவட்டி வசூல் தொடர்வதாக போலீசாருக்கு புகார்கள் வருகின்றன. எனவே,கந்துவட்டி தொடர்பாக புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,கந்துவட்டி வசூலிப்பதை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்று திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் மக்களிடம் கந்துவட்டி வசூலிப்பது தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடைச்சட்டம் 2003-ன்படி சிறை தண்டனைக்குரிய குற்றமாகும் எனவே,கந்துவட்டி வசூலித்து பொதுமக்களிடம் பணத்தை சுரண்டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதனால் திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட நபர்கள்,சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

^