முதல் முறையாக நெல் உணர்த்தும் இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்த தஞ்சை மாவட்ட ஆட்சியர்:(Exclusive)

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 27.மி.மீ மழை பெய்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 295.மி.மீ.மேல் மழை பெய்துள்ளது. இதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் பயிர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பு அலுவலர் திரு.சுப்பையன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப அவர்களும் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததில், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதை அறிந்தனர். இதை தமிழக அரசின் கவனத்திற்கு உடனே கொண்டு சென்றனர். வேளாண்மை துறை முதன்மை செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி முதல் முறையாக தஞ்சை மாவட்டத்திற்கு நெல் ஈரப்பதத்தை குறைத்திடும் வகையில் நெல் உணர்த்தும் இயந்திரம் சோதனையோட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த இயந்திரத்தின் கொள்ளளவு 2 மெட்ரிக் டன் உடையது. இதில் இரண்டு மணி நேரத்தில் இந்த இயந்திரம் 24 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கதிர்களை 18 சதவீதம் ஈரப்பதமாக கொண்டு வர வாய்ப்புள்ளது. இந்த சோதனையோட்டத்தை வெற்றிகரமாக பரிசோதனை செய்ததை விவசாயிகள் பெருமையாக கருதி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், கண்காணிப்பு அலுவலர் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

^