ரகசியத்தை அம்பலப்படுத்திய பாகிஸ்தான் M.P.அயுஷ் சதீக்:

இந்திய விங் கமாண்டர் அபினந்தனை விடுவித்தது தொடர்பாக, தற்போது ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர், அப்போது பாக் அஸெம்பிளியில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா பிப்.27யில் பாகிஸ்தானை தாக்கவுள்ளது என கூறியபோது பாக் ராணுவ தளபதி கமர் பாஜ்வா பயத்தில் ஆடி போனாராம். பயத்தில் அவரது கால்களில் உதறல் காணப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அப்போது நடைபெற்ற அபிநந்தன் தொடர்பான அவசர ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கானும் கலந்துக்கொள்ள மறுத்துவிட்டாராம். பாக் விங் கமாண்டர் கூறுகையில், அபி அவர்களை விடுவிக்கவில்லையெனில், அந்த நாள் இரவு ஒன்பது மணிக்கு இந்தியா, பாக்கை தாக்கும் என அன்றைய தின கூட்டத்தில் பேசியதாக அவர் கூறியுள்ளார். மேலும் விங் கமாண்டர் அபி அவர்களை விடுவித்து அமைதியை நிலைநாட்டுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை என அந்நாட்டு தேசிய அசெம்பிளியில் பாக் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் அயுஷ் சதீக் கூறியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

^