கொரோனா தடுப்பூசி வீணடித்த மாநிலங்களில் ஹரியாணா முதல் இடம்..

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிகளவில் வீணடித்த மாநிலங்களில் ஹரியாணா முதல் இடம் பிடித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இதுவரை சுமார் 18 கோடி தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.இந்நிலையில், அவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீத தடுப்பூசி மருந்து வீணாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன் படி, அதிகபட்சமாக ஹரியாணா 6.49 சதவீதமும், அசாம் 5.92 சதவீதமும், கொரோனா தடுப்பூசியை வீணடித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தெரிவித்துள்ளது.அதேபோல், ராஜஸ்தான் 5.68 சதவீதமும், தமிழ்நாடு 4.13 சதவீதமும் தடுப்பூசியை வீணடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

^