மனிதநேயமிக்க நீலகிரி மாவட்ட வன அதிகாரி:(Exclusive)

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் வருகிறது கார்குடி. இங்கு ரேஞ்சராக பணியாற்றுபவர் சிவக்குமார். இவர் இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும், பிற இனத்தவர்களுக்கும் பல உதவிகளையும், வனப் பணியாளர்களின் நண்பனாகவும், வன பணிகளையும் செவ்வனே செய்து வருவதாக நாம் தகவல் அறிந்தோம். நமது டீம் அவரை நேரில் சந்தித்து சிறிய பேட்டி ஒன்றை கேட்டபோது , சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். எமது டீம் அங்குள்ள மக்களிடம் இவரை பற்றி கேட்டபோது , எங்கள் பகுதி ரேஞ்சர் மிகவும் மனிதநேயமிக்கவர். இவர் இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும், பிற இன மக்களுக்கும் நிறைய உதவிகளை செய்பவர். 2016 ல் இவர் வனவராக இருந்தபோது, யானைகள் முகாமை சிறப்பாக பராமரித்து மக்களுக்கும், யானைகளுக்கும் தடுப்புகள் போட்டு சீரிய முறையில் சிறப்பாக பணிமேற்கொண்டமைக்காக, அப்போதிருந்த தேசிய புலிகள் ஆணைய தலைவரால் நேரடியாக பாராட்டப்பட்டவர். இவர் 1998 ல் தனது முதல் பணியை நிலக்கோட்டை பகுதியில் பாரஸ்ட் கார்டாக துவங்கினார். மேலும் கார்குடி சரகத்திற்க்குட்பட்ட தொரப்பள்ளி பகுதியில் மனித, விலங்கு மோதல் ஏற்படாதவண்ணமும், அகழிகளை பராமரிப்பு செய்தும் வனப் பணியாளர்களுடன் சீரிய முறையில் பணிகளை செய்து மனித உயிரிழப்புகள் ஏற்படாதவண்ணம் பாதுகாத்துள்ளார். இவருக்கு சென்ற வருடம் நன்றாக பணிசெய்தமைக்காக சிறந்த வனச்சரகர் அலுவலர்க்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள வன பணியாளர்களிடம் இவரை பற்றி விசாரித்தபோது, எங்கள் ரேஞ்சர் எங்களை நண்பனாகவும், குடும்பத்தில் ஒருவராகவும் பார்த்து எங்கள் நல்லது, கெட்டது அனைத்திலும் உற்ற துணையாக இருப்பார். எங்கள் ரேஞ்சரை பற்றி சொல்ல, எங்களுக்கு வார்த்தைகள் இல்லை என்று முடித்துக்கொண்டனர். இப்பகுதியில் உள்ள சில சமூக விரோதிகள், இப்பகுதியில் இவர் ரேஞ்சராக தொடர்ந்தால், குற்ற செயல்களில் ஈடுபடமுடியாது என இவரை மாற்றுவதற்கு பல உத்திகளை கையாளுகிறார்கள் என அப்பகுதி மக்கள் கிசுகிசுக்கிறார்கள். மேலும் இப்பகுதி மக்கள் எங்கள் ரேஞ்சர் இங்கு இருந்தால் மட்டுமே எங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என அவரை வெகுவாக பாராட்டுகின்றனர். இவரின் சீரிய மக்கள் பணிக்கு நாமும் ஒரு வாழ்த்துக்கள் சொல்வோம்.

^