மரியாதையாகப் பேசாவிட்டால் மு.க.ஸ்டாலின் காது ஜவ்வு கிழிந்துவிடும்..எடப்பாடி..!

மரியாதை கொடுத்து பேசவில்லை என்றால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காது ஜவ்வு கிழிந்துவிடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது கூட்டங்களில் பேசியும் மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து ஓட்டச்சத்திரம் பகுதியில் முதலமைச்சர் வாக்கு சேகரித்தர். பின்னர் முதல்வர் பேசுகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு ஸ்டாலின் மதுரைக்கு வந்து போனதே உதாரணம். தி.மு.க ஆட்சி இருந்த காலத்தில் அவர் துணை முதல்வராக இருந்தார். அப்போது கூட மதுரைக்குள் நுழைய முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்றைய ஆட்சியில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் மதுரையில் சாதாரணமாக நடைப்பயணம் மேற்கொள்ள முடிகிறது. தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக இருப்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு’’ என்று பேசிய முதல்வர், உணர்ச்சிவசப்பட்டு, ஒருமையில் ஸ்டாலினை வசைபாடினார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் கூலிப்படை தலைவன் போல் செயல்படுகிறார். அவரை போன்றே அவரது தொண்டர்களும் இருப்பதாக விமர்சித்தார். தந்தையின் ஆதரவில் கொள்ளைப் புறம் வழியாக ஸ்டாலின் அரசியலுக்கு வந்தார் என கடுமையாக சாடினார். ஸ்டாலின் மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும் எனவும், தாம் திருப்பி பேசினால் ஸ்டாலினின் காது ஜவ்வு கிழிந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் மனித பிறவிக்கு லாக்கில்லை. ஈனப்பிறவி. நீ அரசியலில் நேரடியாக மோது அதற்கு தகுந்த பதிலை அளிக்கிறோம் என முதல்வர் எடப்பாடி தர லோக்கலாக இறங்கி பேசியுள்ளார்.

^