விஜய் தம்பிக்கு ஜோடியாகும் முன்னணி நடிகரின் மகள்!

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவாரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவாரகொண்டா தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா கமிட் ஆகியுள்ளார். நடிகர் விஜய் தேவாரகொண்டா 'நுவ்வில' என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் 2011ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், இவரை அனைவருக்கும் நடிகராக எடுத்துக் காட்டியது "பெல்லி சூப்புலு' திரைப்படம் தான். இந்த படத்தை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இவருடைய திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த 'கீதா கோவிந்தம்', 'டாக்ஸி வாலா' போன்ற படங்கள் தொடர்ந்து இவருக்கு ஹிட் பட வரிசையில் அமைந்தது. தற்போது 'டியர் காம்ரேட்' படத்தில் நான்கு மொழிகளில் நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து இவருடைய சகோதரர் ஆனந்தம் தேவாரகொண்டாவும் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். 'தொராசனி' என்கிற பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கே.வி.ஆர் மகேந்திரா இயக்குகிறார். இந்த படத்தை மதுரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆனந்த் தேவாரகொண்டாவுக்கு ஜோடியாக, பிரபல முன்னணி நடிகர் ராஜசேகரின் இளைய மகள் சிவாத்மிகா நடிக்க உள்ளார்.

^