விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும்..!!

விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் முதன்முறையாக விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏழு வருடங்களுக்கு முன் வீட்டைவிட்டுச் சென்ற விஜய் சேதுபதி கதாபாத்திரம் திருநங்கையாக மாறிவருவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொது சமூகத்தால் திருநங்கைகள் ஒதுக்கிவைக்கப்படுவதும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் படம் பேசியுள்ளது.

இருப்பினும் மும்பையில் குழந்தை கடத்தலுக்கு தான் உதவியதாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் கூறும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான திருநங்கை ரேவதி பேசியுள்ளார்.

“நடிகர் விஜய் சேதுபதி திருநங்கைகள் மேல் மரியாதை கொண்டுள்ளார். எங்களுக்கு தோள் கொடுக்கிறார். எங்களுக்கும் அவர்மேல் அளவுகடந்த மதிப்பு உண்டு. ஆனால் சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் மோசமான கருத்தை பரப்ப உதவிபுரிந்துள்ளார்.

இயக்குநர் கதை கூறியதும் அதைப் பற்றி கேள்வி எழுப்பாமல் எப்படி நடித்தார். மும்பையில் எந்த திருநங்கை குழந்தைகள் கடத்தலில் ஈடுபடுகிறார். திருநங்கைகள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து தற்போதுதான் மேலே வர முயற்சி செய்துவருகின்றனர்.

அந்த நேரத்தில் இந்த மாதிரியான படத்தை வெளியிட்டு எங்கள் மேல் தவறான எண்ணத்தைப் பரப்புகிறீர்கள். நான் எழுதிய என் வாழ்க்கை வரலாறான ‘வெள்ளை மொழி’ எனது கதை மட்டுமல்ல, திருநங்கைகள் அனைவருக்குமானது. அதைப் படித்தாலே அவருக்கு எங்களைப் பற்றி தெரிந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளுக்கு எதிரான காட்சிகளை வைத்துள்ளதால் படக்குழுவினர் மேல் வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

^