கிளாமர் காட்டிய பூமிகாவுக்கு லெஃப்ட் ரைட்

ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், யு டர்ன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூமிகா. கிளாமர் நடிப்பைவிட சுட்டித்தனமான, குடும்ப பாங்கான வேடங்களிலேயே ரசிகர்களை கவர்ந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட பூமிகா, தற்போது 40 வயதை கடந்த நிலையில் கனமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஒப்புக்கொள்கிறார். அவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென்று ஸ்பெஷல் போட்டோ செஷன் நடத்தினார். அதில் தொடை தெரியும் அளவுக்கு படுகிளாமர் உடைகள் அணிந்து போஸ் அளித்ததுடன் அதனை நெட்டில் வெளியிட்டார் பூமிகா. 40 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள் என்று ஒரு தரப்பு அவரை பாராட்டினாலும், கிளாமர் காட்டி சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட காத்திருப்பதாக சிக்னல் தருகிறீர்களா, உங்களின் எளிமையான நடிப்பும், அழகான புன்னகையும்தான் இத்தனை நாள் ரசிகர்களை கவர்ந்தது அதை மறுந்துவிடாதீர்கள் என்று சிலர் பூமிகாவை வம்புக்கு இழுத்தனர். அதைக்கண்டு ஷாக் ஆனார். தற்போது உடல் முழுக்க மூடியபடி சுடிதார் அணிந்து அந்த புகைப்படத்தை நெட்டில் வெளியிட்டிருக்கிறார்.

^