​குமரியில் போலீசாருக்கு நடந்த கொடுமை..!

 .

கடந்த வாரம் கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு கொடுக்க நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த 5000 போலீசார் கலந்து கொண்டார்கள் அவர்களுக்கு வழங்கபட்ட உணவு தரமில்லாதாக இருந்து இருக்கிறது. அத்துடன் பிரதமர் மோடி வரும் தினத்தன்று மதியம் பிரியாணி கொடுத்து இருக்கிறார்கள். அந்த பிரியாணி பொட்டலம் கெட்டு போய் இருந்தால் , பாதுகாப்புக்கு இருந்த போலீசார், அந்த பிரியாணி பொட்டலத்தை தூக்கி போட்டு விட்டு பட்டினியோடு பிரதமருக்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கிறார்கள் போலீசார்க்கு உணவு கொடுப்பதற்காக 5 லட்சம் நிதி வேறு கொடுத்து இருக்கிறார்கள் என்பது தான் வேதனை

^