​பலதடைகளை தாண்டி புதுச்சேரியில் சீட் பெற்ற என்.ஆர்.காங்கிரஸ்..! . .

. .

புதுச்சேரியில் திமுகவினர் தங்கள் கட்சியினர் தான் போட்டியிட போகிறார்கள் என மேடைக்கு மேடை பேசி வந்தார்கள். திமுக கூட்டணி ஒப்பந்த்தில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் பெற்று விட்டதால், திமுகவினர் அதிருப்தி அடைந்தனர். லோக்சபாவில் காங்கிரஸ்ஸை ஆதரிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் அதே போல் அதிமுகவிலும் தங்கள் கட்சி தான் போட்டியிடும் என பேசினார்கள். இதற்கிடையே அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமகவும் , புதுச்சேரியில் நிற்க திட்டம் வகுத்தது. ஆனால், என்.ஆர்.காங்கிரஸ்சின் தலைவர் ரங்கசாமி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தான் போட்டியிடும் என திடமாக சொல்லி வந்தார் இதற்கிடையே புதுச்சேரி பாஜகவினர் மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை சந்தித்து பேசினார். அவரும் திடமான புதுச்சேரியை என்.ஆர்.காங்கிரஸ்சுக்கு கொடுத்தாகி விட்டது என தெரிவித்து விட்டார்கள் இதனால் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி தற்போதே லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று விட்டது போல் கனவு காண்கிறார் என்கிறார்கள்

^