பாக்., விமானியை அடித்துக் கொன்ற பாகிஸ்தானியர்கள்

பாக்., விமானப்படை விமானியை, இந்திய விமானி என நினைத்து பாகிஸ்தானியர்களே அடித்துக் கொன்றதாக லண்டன் குடியுரிமை பிரிவு வழக்கறிஞர் கலீத் உமர் தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாக்.,ன் எப் 16 ரக விமானத்தை, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். பாக்., பதிலுக்கு தாக்கியதில் அபிநந்தன் சென்ற மிக் 21 ரக விமானமும் நொருங்கியது. அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பித்து, தவறுதலாக பாக்.,எல்லைக்குள் இறங்கிய போது அங்கிருந்த பாகிஸ்தானியர்கள் சிலர், அபிநந்தன் மீது கற்களை வீசி தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய போதே பாக்.,ராணுவம் அபிநந்தனை சிறைபிடித்தது. அபிநந்தனை போன்று எப் 16 விமானத்தை இயக்கிய பாக்.,விமானப்படை விங் கமாண்டர் ஷாஜஸ் உத் தின் என்பரும் பாராசூட் மூலம் தப்பித்து, பாக்., எல்லைக்குள் இறங்கி உள்ளார். அவரை இந்திய விமானி என தவறாக நினைத்து, அங்கிருந்த பாகிஸ்தானியர்கள் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாக லண்டன் வாழ் பாகிஸ்தானியரான குடியுரிமை வழக்கறிஞர் உமர் தெரிவித்துள்ளார். இதனை நேரில் பார்த்த சாட்சிகளும், வீடியோ ஆதாரங்களும் உள்ளதாகவும் உமர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ டிவி செய்திகளில் ஒளிபரப்பப்பட்ட போது தான் பார்த்ததாகவும், பின்னர் அந்த வீடியோ பாக்.,ன் சென்சார் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டதாகவும், சிறிது நேரத்தில் ஆன்லைனில் அந்த வீடியோ நீக்கப்பட்டதாகவும் உமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த வீடியோவை தான் ஏற்கனவே பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

^