​எம்பி தேர்தலுடன் , சட்டமன்ற இடைத்தேர்தல் கிடையாது..?

.

எம்பி தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக இருக்கிற சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டி வருகிறது தினகரன் பக்கம் இருக்கும் 18 எம்எல்ஏகள் தங்கள் தொகுதிகளுக்கு மேல் முறையீடு செய்யவில்லை? அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம். ஆனால் ஆணையம், என்றைக்கு தகுதி இழப்பு வழக்கில் மேல் முறையீடு செய்ய முடியாதோ, அன்றில் இருந்து தான் 6 மாதம் கணக்கு. அதனால் தமிழகத்தில் இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த முடியாது என சொல்ல இருக்கிறார்கள் அத்துடன் ஒரே நேரத்தில் இரண்டு வாக்கு இயந்திரங்களை வைக்க வேண்டும். ஒட்டு போட வருபவர்களிடம் சட்டமன்ற தொகுதியையும் சொல்லி ஒட்டு போட வைக்க வேண்டும். அதில் சிலர் ஒட்டு போடாமல் சென்று விட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது அதே போல், இயந்திரங்கள் மாறி போகவும் வாய்ப்பு இருக்கிறது அப்படி மாறி போனால், பிரச்சனை பெரிதாகி விடும் இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் இருந்து பிரதான எதிர்கட்சிகள், வாக்கு இயந்திரங்களை ஒழித்து விட்டு, மீண்டும் வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என தெரிவித்து இருப்பதால், அதை காரணம் காட்டி இடைத்தேர்தலை நிறுத்தி வைக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு போட்டு இருக்கிறார்கள்.

^