​திமுக கூட்டணியில் பாமக உள்ளே ......விடுதலைசிறுத்தைகள் வெளியே

 . .நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சி.பி.ஐ, சி.பி.எம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற இருப்பதாகவும், அதைப்போல் அதிமுக அமைக்கும் அணியில் பா.ஜ.க, பா.ம.க, தேமுதிக, கொங்கு மண்டல தேசியக்கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிகட்சி, இந்திய ஜனநாயக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், இந்த கூட்டணியில் தான் இரு கட்சிகளும் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.கவை தங்கள் பக்கம் இழுக்க தற்போது திமுக முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சில தகவல்கள் அரசியல் களத்தில் வெளியாகி உள்ளது. அதில், தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது என்ற முடிவில் ராகுல் காந்தி உள்ளார். அதற்கு அதிமுக மற்றும் பாஜக உருவாக்கும் கூட்டணியில் உள்ள பா.ம.கவை வெளியே கொண்டு வந்து திமுக கூட்டணியில் இணைத்துவிட்டால் வடதமிழகத்தில் அதிமுக அமைக்கும் கூட்டணியின் வெற்றியை தடுத்து விடலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியிடம் யோசனை தெரிவித்திருப்பதாகவும், இதனை தீவிரமாக பரிசீலித்த ராகுல் காந்தி தனக்கு நெருக்கமான திமுக தலைவர்களிடம் இது குறித்து ஆலோசித்து ஸ்டாலினிடம் தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்திருப்பதாகவும், இதனை தொடர்ந்து ராகுல் காந்தியின் தகவல் ஸ்டாலினிடம் செல்ல, ஸ்டாலினும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் இது குறித்து விவாதித்து இருப்பதாகவும், விவாதம் முடிவில் ஸ்டாலினும் பா.ம.கவுடன் கூட்டணி வைக்க தற்போது சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் உள்ளது. 4 எம்.பி தொகுதி, 3 இடைதேர்தல் தொகுதி என கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பா.ம.கவுடன் திமுக நடத்தி வருவதாகவும் தகவல்கள் உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி உறுதியான நிலையில் காங்கிரஸ் மூலம் திமுக தற்போது அழைப்பு விடுத்துள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ராமதாஸ் மற்றும் அன்புமணிக்குள் விவாதம் நடந்து வருவதாகவும், அதைப்போல் பா.ம.கவின் தற்போது நிலைப்பாடு குறித்து ஆளும் அதிமுக தரப்புக்கு தகவல் சென்றுவிட்டதால் ஆளும் அதிமுக தலைமையும் தற்போது பா.ம.க மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் அரசியல் களத்தில் உள்ளது. அப்படி பாமக திமுக கூட்டணிக்குள் வந்தால், விடுதலை சிறுத்தைகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விடும் என்கிறார்கள்

^