​கொடநாடு கொலையும், சிக்கும் முக்கிய அமைச்சர்கள் . . .

. . .

கொட நாட்டில் கொலைளயும் கொள்ளையும் நடந்த முதல் நாள் இரவு கோவையில் இருந்து சிலர் கோத்தகிரிக்கு வந்து ரூம் போட்டு தங்கி இருந்தார்கள். இரவு ஹோட்டலில் இருந்து கிளம்பிய போனதையும், அவர்களை கொட நாட்டில் பார்த்த ஆதாரங்களையும் கடந்தாண்டே டிஜிபியிடம் புகார் கொடுத்து இருக்கிறார் தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் . ஆனால் டிஜிபி அதை தீவிரமாக விசாரிக்கவில்லை மாறாக அந்த கொலையாளிகளுக்கு ரூம் போட்டு கொடுத்தது அமைச்சர் வேலுமணி தான் என்கிறார் அப்படி என்ன தான் கொடநாட்டில் தேடினார்கள்? என விசாரித்தால், ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ், தங்கமணி, வேலுமணி, வீரமணி ஆகியோர்களை அழைத்து விசாரணை நடத்தினார் அதன் பின் அவர்களின் சொத்து சம்பந்தபட்ட பத்திரங்களை பறிமுதல் செய்து, அதை கொடநாட்டில் வைத்து இருந்தார் அந்த பத்திரங்களை கொள்ளை அடிப்பது தொடர்பாக தான் கொலை நடந்து இருக்கிறது. இதில் 5 அமைச்சர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என வெற்றி வேல் ஆணித்தரமாக குற்றம் சாட்டுகிறார்.

^