வேலூர் ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடுகள்.

.வேலு-ர் ஆவின் பால் நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கி கொண்டு இருந்தது. சமீபத்தில் அந்த நிறுவனம் 35 கோடியை நஷ்டத்தை காட்டியது. அதில் பால் உற்பத்தியாளர்களுக்கும், அங்கு பணியாற்றுபவர்களுக்கும் சம்பளம் போட முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள் அதில் நிறைய முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டு பிடிக்கபட்டது. பொங்கல் சமயமாக இருப்பதால், இப்போது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் .. என அரசு நினைத்து, கடனாக 30 கோடியை கொடுத்து, அதை உடனடியாக சம்பளம் போட சொல்லி இருக்கிறது பொங்கல் முடிந்ததும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பொங்க வைக்கபடும் என்கிறார்கள் ஊழியர்கள் .

^