நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள் புகைப்படம்..!!

நடிகர் பரத் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து ‘காதல்’, ‘வெயில்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஸ்பைடர்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.நடிகர் பரத், பல் மருத்துவர் ஜெஷ்லியை காதலித்து 2013ல் செப்டம்பர் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது தன் குழந்தைகளோடு பரத் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

^