திருவாரூர் தேர்தலில் மு.க.அழகிரி போட்டியிடுவாரா ???

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, பருவமழையைக் காரணம் காட்டி தள்ளிவைத்த தேர்தல் ஆணையம். தற்போது திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கையில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகச் சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்னும் வழக்கறிஞர். இதே கருத்தை தற்போது திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திமுகவில் மீண்டும் இணைவதற்கு அண்மையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் மு.க.அழகிரி, சொல்லப்போனால் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினை ஏற்றுக்கொள்கிறேன் என்றுக்கூட அவர் பேட்டியளித்தார். இருப்பினும் அவர் கட்சியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் மு.க.அழகிரி இன்று தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், தான் ஓய்வில் இருக்கிறேன், ஆகையால் இடைத்தேர்தல் குறித்து தற்போது எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை, தற்போது நடக்கும் இந்த தேர்தலை கூட யாரேனும் வழக்கு தொடர்ந்து நிறுத்தக்கூட வாய்ப்பு உள்ளது என கூறினார். அதே சமயம் ஆதரவாளர்கள் அனைவரும் வெளியூரில் உள்ளனர். ஆகையால் அவர்கள் வந்ததும் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார். தற்போது கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள ஸ்டாலின், தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு, திருவாரூரில் போட்டியிடுவார் என்ற செய்தி முதலில் வெளியானது, ஆனால் அதனை ஸ்டாலின் மறுத்துவிட்டார். அதனையடுத்து கருணாநிதியின் மகள் செல்வி திருவாரூரில் போட்டியிடுவார் என மற்றொரு தகவல் வந்தது, ஆனால் தற்போது வரை அவரது பெயர் குறித்து விருப்பமனுவை யாரும் தாக்கல் செய்யாததால் அதுவும் தற்போது உண்டா என்ற கேள்வி எழும்பி உள்ளது. மூன்றாவதாக, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று தகவல் கூறப்பட்டது, ஆனால் தற்போது உதயநிதி படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆகையால் அவர் இப்போது போட்டியிடுவாரா என்ற கேள்வி எழும்பி உள்ளது. இறுதியாக தி.மு.க கழக திருவாரூர் மாவட்ட.செயலாளர் பூண்டி கலைவாணனே திமுக வேட்பளராக நிறுத்தப்படுவார் என்ற எதிரப்பாரக்கப்படுவதாக செய்திகள் உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க தி.மு.க தலைமைக்கு சில விஷயங்களைப் புரிய வைப்பதற்காக திருவாரூரில் சுயேட்சையாக போட்டியிட மு.க.அழகிரி நினைப்பதாக சில செய்திகள் அரசியல் களத்தில் பேசப்படுகிறது. அதிலும் குறிப்பாக திமுக வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியானவுடன் மு.க.அழகிரி இந்த அறிவிப்பை வெளியிடுவார் என அரசியல் களத்தில் பேசப்படுகிறது.

^