புற்றுநோய் சிகிச்சையில் காதல் திருமணம்; நிதிக்கு உதவிய 'பேஸ்புக்' நண்பர்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த மரிஷா சாப்ளின் 26, ஜான் ஹிப்ஸ்29, சிகிச்சைக்காகச் சந்தித்த இடத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்ததால் இயல்பாகக் குழந்தை பெற மரிஷாவின் உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் செயற்கைக் கருவூட்டல் மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர். அதன்படி முதல் பெண் குழந்தையையும் பெற்றெடுத்தனர். இரண்டாவது குழந்தை பெற விரும்பியபோது நிதி சிக்கல் ஏற்பட்டது. பேஸ்புக் குழுவைச் சேர்ந்த சில நண்பர்கள் இதனை அறிந்தனர்.மரிஷாவுக்காக ரகசியமாக நிதி திரட்டினர். ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சேர்ந்தது. அதை இதுவரை சந்தித்திராத மரிஷாவுக்கு அனுப்பினர். செயற்கை கருவூட்டல் மூலம் கருவுற்றார் மரிஷா. சிசேரியன் மூலம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மரிஷா கூறுகையில், ''அறுவைசிகிச்சை முடிந்தவுடன் குழந்தை பிறந்ததும் பேஸ்புக் நண்பர்களுக்கு இஸ்லா பிறந்த செய்தியைச் சொன்னேன். இந்த உணர்வு அற்புதமானது. இதுவரை சந்தித்திராத நண்பர்கள், எங்களுக்காக இவ்வளவு பெரிய தொகையை அளித்தது ஆச்சர்யமாக உள்ளது.எனக்காக நிதியுதவி செய்தவர்களுக்கு நன்றி உடையவளாக இருப்பேன்,'' என்று தெரிவித்தார்.

^