பொருளாதார குற்றவாளிகளுக்கு ‘செக்’ வைக்க ஜி-20 மாநாட்டில் 9 அம்ச கொள்கை: பிரதமர் மோடி தாக்கல் செய்தார்

வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடும் குற்றவாளிகளை ஒப்படைப்பதில் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், 9 அம்ச கொள்கைையை ஜி20 நாட்டில், இந்தியா தாக்கல் செய்தது. தொழிலதிபர்கள் சிலர் வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விடுகின்றனர். இவர்களை இந்தியா அழைத்து வர, குடியுரிமை பெற்ற நாட்டில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் 9 அம்ச கொள்கை ஒன்றை இந்தியா தயாரித்தது. இந்நிலையில் சர்வதேச வர்த்தகம், நிதி மற்றும் வரிமுறைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக வளர்ச்சி அடைந்த நாடுகளின் 2 நாள் ஜி 20 மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் நேற்று தொடங்கிது. இதில், அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி அரேபியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் சார்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாடு இன்று நிறைவு பெறுகிறது. தப்பியோடும் பொருளாதார குற்றாவாளிகளை விரைவில் இந்தியா கொண்டு வந்து தண்டிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட 9 அம்ச கொள்கையை, இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கி, அவர்களை விரைவில் சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்கும் வகையில் சட்ட நடைமுறைகளில் ஜி 20 நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊழல், நாடு கடந்த திட்டமிடப்பட்ட குற்றம் ஆகியவற்றுக்கு எதிரான ஐ.நா. விதிமுறைகள், சர்வதேச ஒத்துழைப்பு விதிமுறைகள் ஆகியவை வலுவாக அமல்படுத்தப்பட வேண்டும். நிதி நடவடிக்கை சிறப்பு படை (எப்ஏடிஎப்) சர்வதேச ஒத்துழைப்பு வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போதுதான் நிதி புலனாய்வுத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல்களை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்ள வழி வகுக்கும். தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகளை அடையாளம் காணுதல், நாடு கடத்தல், உள்நாட்டு சட்டத்துக்கு உட்பட்டு நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜி-20 நாடுகளுக்கு உதவும் வகையில் நிலையான விதிமுறைகளை எப்ஏடிஎப் உருவாக்க வேண்டும். பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்வதற்கான பணிகளை தொடங்குவது பற்றி ஜி-20 அமைப்பு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகளுக்கு எந்த நாடு அடைக்கலம் கொடுக்காத வகையில் வழிமுறைகளை உருவாக்க கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் ஜி-20 அமைப்பிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம்: ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். இது, இந்தாண்டில் இவர்கள் இடையே நடைபெறும் 4வது சந்திப்பு. சீனாவின் உகான் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் ஜின்பிங்கை மோடி சந்தித்து பேசினார். இந்நிலையில், நேற்றும் அர்ஜென்டினாவில், ஜின்பிங்கை, மோடி சந்தித்து பேசினார். அப்போதும் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து அவ்ரகள் பேசினர். உகான் சந்திப்பிக்கு பின், இந்தியா-சீனா இடையேயான உறவுவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இருவரும் கூறினர். 12 ஆண்டுகளுக்குப் பின் ரஷ்யா - இந்தியா - சீனா முத்தரப்பு பேச்சுவார்த்தைஜி20 கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் ஒன்றாக சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் இந்தியா-பசிபிக் கடல் பகுதியை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. இதையடுத்து, ரஷ்யா - இந்தியா - சீன (ஆர்ஐசி) தலைவர்கள் சந்தித்து பேசும் முத்தரப்பு கூட்டம் நடந்தது. இந்த நாடுகளுக்கு இடையே 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த முத்தரப்பு கூட்டம் நேற்று நடந்தது. ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இதில் பங்கேற்றனர். இதில் சர்வதேச அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பல துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி மூவரும் பேசினர். வடகொரிய அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்ஜி20 மாநாட்டில் தென் கொரிய அதிபர் மூன் ஜேன்-ஐ, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்கை அடைய வேண்டும் என அவர்கள் உறுதிபட தெரிவித்தனர். வடகொரியா மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை தொடரவும், அணு ஆயுத ஒழிப்பு பாதைக்கு திரும்புவதுதான் ஒரே வழி என வடகொரிய உணர்வதை உறுதி செய்யவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். அப்ேபாது, சிங்கப்பூரில் கடந்த ஜூனில் நடந்த சந்திப்புக்குப் பின், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். புடினை அலட்சியம் செய்த டிரம்ப்உக்ரைன் நாட்டின் மூன்று கப்பல்களை ரஷ்ய அதிபர் புடின் உத்தரவுப்படி ரஷ்ய ராணுவம் சிறை பிடித்துள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்த கப்பல்களை விடுவிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஆனால், புடின் அதை ஏற்கவில்லை. இதனால், இரு தலைவர்களுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஜி-20 மாநாட்டின்போது புடினும், டிரம்ப்பும் சந்தித்து பேச திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் புடினை சந்திக்கும் திட்டத்தை டிரம்ப் ரத்து செய்தார். மேலும், மாநாட்டின் போது புடினை பலமுறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோதும், டிரம்ப் அவரை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தினார்.

^