ஜிப்மரில் செவிலிய மாணவிகள்:விளக்கவுரையுடன் நடந்தது

ஜிப்மர் செவிலியர் கல்லுாரியின் முதலாமாண்டு மாணவிகள் 13வது ஆண்டு தீப ஔி ஏற்றி உறுதி மொழி ஏற்கும் விழா, அப்துல் கலாம் கலையரங்கில் நடந்தது.கல்லுாரி முதல்வர் குமாரி வரவேற்றார். ஜிப்மர் இயக்குனர் விவேகானந்தம் தலைமை தாங்கினார். வேலுார் கிறிஸ்டியன் செவிலியர் கல்லுாரி டீன் செல்வா டைட்டஸ் சாக்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.ஜிப்மர் கல்வி பிரிவு டீன் சுவாமிநாதன், மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் ஷங்கர் பதே ஆகியோர் வாழ்த்தி பேசினர்.உதவி பேராசிரியர் ரமேஷ், செவிலிய மாணவிகள் தீபம் ஒளி ஏற்றி உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியின் வரலாற்றை எடுத்துரைத்தார். செவிலியர் துறை தலைமை அதிகாரி சாந்தி தமிழ்மணி பிளாரன்ஸ் நைட்டங்கேல் உறுதிமொழி வாசித்தார். தொடர்ந்து செவிலிய மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். செவிலியர் படிப்பில் முதலிடம் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. டாக்டர் லட்சுமி ராமமூர்த்தி நன்றி கூறினார்.

^