காமெடியனாகும் வில்லன் படத்தில் டபுள் ஹீரோயின்

நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்த மொட்டை ராஜேந்திரன் சமீபகாலமாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் வில்லனாக நடித்திருக்கும் மகாநதி சங்கர், காமெடி நடிகர் ஆகிறார். ‘ராஜாவுக்கு ராஜா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் டபுள் ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் ஏ.வசந்த்குமார் கூறும்போது, ‘சிறிய சிறிய தவறுகள் செய்யும் தந்தை மகனை அடிக்கடி போலீஸ் பிடித்து தண்டனை பெற்றுத்தருகிறது.மகனை போலீஸாக்கி விட்டால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணும் தந்தை மகனை போலீஸ் வேலையில் சேர்த்து விடுகிறார். தைரியமில்லாத அவரோ ஒரு வில்லியிடம் சிக்கிக்கொள்கிறார். அவரிடமிருந்து ஹீரோ எப்படி தப்புகிறார் என்பதை காமெடியாக சொல்கிறது கதை. மகனாக மகாநதி சங்கர், வி.ஆர்.வினாயக் நடிக்கின்றனர். தியா, வைஷ்ணவி கதாநாயகிகள், அங்காடி தெரு சிந்து, மனோபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பி.டி.சையது முகமது தயாரிப்பு. காசி விஷ்வா ஒளிப்பதிவு. ஜெயக்குமார் இசை. இதன் படப்பிடிப்பு மேட்டுப்பாளையம், ஊட்டி, தேனி பகுதிகளில் நடந்துள்ளது. இவ்வாறு இயக்குனர் கூறினார்.

^