அமலாபாலுக்கு 2வது திருமணம்

நடிகை அமலாபால் கோலிவுட் இயக்குனர் விஜய்யை மணந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து அமலாபால் மீண்டும் நடிக்க வந்தார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான ராட்சசன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந் தார். மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் உண்டா என்ற கேள்விக்கு அமலாபால் பதில் அளித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:முதலில் நான் செய்துகொண்ட திருமணம் எனது விருப்பத்தை பொறுத்து நடந்தது. ஆனால் அது வெற்றியாக அமையவில்லை. எனவே எனது மறுதிருமணம் பற்றிய முடிவை எனது பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்கு நான் சம்மதம் தெரிவிப்பேன். அதேசமயம் நான் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை’ என்றார்.

^