ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் குடம்புளி

குடம்புளி (Garcinia gummi-gutta, இலங்கை வழக்கு: சீமை கொறுக்காய்) என்ற இந்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம் கட்டிபரேயீ (Guttiferae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. மலபார் புளி மற்றும் காம்போட்ஜ் (கன்னடம்:) என்று அழைக்கப்படும் குடம் புளியானது 'கார்சினியா கம்போஜியோ'(Garcinia cambogia) என்று தாவரவியலாளர்களால் அறியப்படும் பழநறுமணப் பயிராகும்

ரத்த அழுத்தம் குறைக்கும் குடம்புளி ‘மலபார் புளி’ என்ற பெயரும் கொடம் புளிக்கு உண்டு. கொடம் புளியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். கொடம் புளி, கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும். தென் தமிழகத்தில், மீன் குழம்பு செய்யும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொடம் புளியைத்தான் பயன்படுத்துவார்கள். கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும். கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்துவந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் அமிலம இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் தன்மை படைத்தது. இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் குடம்புளி உகந்தது கொடம்புளியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம் ஹோமியோபதி மருத்துவத்தில் குடம்புளியினின்று தயாரிக்கப்படும் மருந்து வயிற்றுப்போக்கினைச் சரிப்படுத்தும் மருந்தாகும்.

அதிகம் படித்தவை

^