ஆண் வேடமிட்டு பள்ளி மாணவியை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கொச்சி தோப்பும்படி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (பெயர் மாற்றம்). இவரது 12 வயது மகள், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாணவியின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் புத்தகப் பையை சோதனை நடத்தினர். அதில் சனீஸ் என்ற பெயரில் எழுதப்பட்ட ஏராளமான காதல் கடிதங்கள் சிக்கின. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்குள்ள அதிகாரிகள் மாணவியிடம் விசாரித்தனர்.
அப்போது மாணவி, கொச்சி பல்லுருத்தி பகுதியை சேர்ந்த சனீஸ்(26) என்ற வாலிபர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து குழந்தை நல அமைப்பினர் பல்லுருத்தி போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சனீஸ் ஆண் அல்ல என்றும், அவர் பல்லுருத்தி பகுதியை சேர்ந்த சினி(26) என்ற இளம்பெண் எனவும் தெரியவந்தது. இவர் ஆண் வேடமணிந்து மாணவியுடன் நெருங்கி பழகி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதை அந்த மாணவி எதிர்த்தபோது செல்போனில் ஆபாச படம் எடுத்துள்ளதாக மிரட்டி, மீண்டும் பலமுறை ஓரினசேர்க்கையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தொடர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சினியை கைது செய்தார்.