சட்ட மன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிடுகிறாரா? முன்னால் எம்.பி.பரசுராமன்:(Exclusive)

                             கு.பரசுராமன்

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வின் "டெல்டா தளபதி" என அன்போடு மக்களால் அழைக்கப்படும் முன்னால் அமைச்சரும், தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினருமான வைத்திலிங்கம் ஆசியோடும், முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவோடும் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரை எம்.பி.யாக இருந்தவர் தஞ்சையை சேர்ந்த கு.பரசுராமன். இவர் வரும் சட்ட மன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிடப் போவதாக நமக்கு தகவல் கிடைத்தது. இவர் எம்.பி.யாக இருந்த போது மக்களுக்கு ஆற்றிய பணிகளை நமது டீம் கள ஆய்வு செய்ததை இங்கு பதிவிடுகிறோம். இவர் டெல்டாவிற்கு பல்வேறு முக்கிய திட்டங்களை கொண்டுவர சிரத்தை எடுத்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மொத்த டெல்டா மாவட்டத்தில் உள்ள ஆறுகளையும், வாய்கால்களையும், ஏரிகளையும் புனரமைத்து விரிவாக்கம் செய்து நவீனமயமாக்க ரூ.11,400 கோடி திட்ட மதிப்பீடு. இதில் முதல் பகுதி டெல்டாவின் கல்லணை கால்வாய் திட்டத்திற்கு ரூ.2610 கோடி திட்ட மதிப்பீட்டை மாண்புமிகு அம்மா அவர்கள் 2015ம் வருடம் மத்திய நீர்வளத்துறைக்கு பரிந்துரை செய்திருந்தார். இதற்கு மத்திய நீர்வளத்துறையால் ரூ.2300 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த பணியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைவில் துவக்கி வைத்து விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற உள்ளார். அதே போல் காரைக்குடியில் இருந்து திருவாரூர் ரயில் வழி பாதைக்கான ரூ.1500 கோடி திட்ட மதிப்பீட்டில் பெண்டிங் இருந்த தொகையை பெற்று தந்ததில் இவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். மேலும் தஞ்சை பெரிய கோயில் புதுபிப்பதற்கான திட்ட மதிப்பீடு ரூ.29 கோடியில் முதற் தவணையாக ரூ.70 லட்சம் பெற்றுத்தந்துள்ளாராம். மேலும் கேந்த்ரா வித்யாலயா பள்ளி கட்டிடத்திற்கு ரூ.18.25 கோடி பெற்று தந்ததை அப்பகுதி மக்கள் இவரை வெகுவாக பாராட்டுகின்றனர். தஞ்சாவூர் டு பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை டு மன்னார்குடி ரயில் வழி பாதை இவரின் முயற்சியால் 99% வேலைகள் முடிந்து தயார் நிலையில் உள்ளதாம். தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜில் மல்டி ஸ்பஷாலிட்டி ஹாஸ்பிடல் அமைக்க ரூ.300 கோடியை முன்னால் முதல்வர் பரிந்துரையோடும், வைத்திலிங்கம் அறிவுரையின்படியும் பெற்று தர முயற்சி எடுத்ததை அப்பகுதி மக்கள் இவரை வெகுவாக பாராட்டுகின்றனர். இதே போல் பல எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளார். இவரை பற்றி தஞ்சை மக்களிடம் விசாரித்தபோது, எங்கள் முன்னால் எம்.பி. மிக எளிமையானவர் மக்களோடு நன்கு பழகக்கூடியவர் அவர் தஞ்சை சட்ட மன்ற தொகுதியில் நின்றால் கண்டிப்பாக வாக்களித்து அமோக வெற்றிபெற செய்வோம் என கூறுகின்றனர். அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது எங்கள் டெல்டா தளபதி வைத்திலிங்கம் ஆசியோடு, எங்கள் அண்ணனுக்கு சீட் கிடைத்தால் வெற்றி பெற செய்வதற்கு களத்தில் தீயாய் வேலைசெய்வோம் என்கின்றனர். இவரின் மக்கள் பணிக்கு நாமும் வாழ்த்துக்கள் சொல்வோம்.

        

           வைத்திலிங்கம்

^