ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது

ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது எனத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஆதார் தரவுகளைப் பயன்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமித் சகுனி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்குத் தனித்துவ அடையாள ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ராவ் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை ஒன்றுக்கு ஒன்று என்கிற அளவில்தான் ஒப்பிட முடியும் என்றும் அதற்கும் ஆதார் எண் தேவை என்றும் தெரிவித்தது. அடையாளந் தெரியாத உடலின் பயோமெட்ரிக் தரவை 120கோடிப் பேரின் தரவுகளுடன் ஒப்பிட்டுக் கண்டறிவது கடினம் என்றும் தெரிவித்தது.

^