விலை போன திருச்சி டிராபிக் போலீஸ், பாதிக்கபடும் பொதுமக்கள்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் கரூர், கோவை பஸ்கள் நிறுத்த இடமில்லை? அதனால் சுவை ரெஸ்டாரண்ட், லலிதா ஜூவல்லரி வாசலில் தான் நிறுத்த வேண்டும். அந்த பகுதியில் நிறுத்தினால், கடைகாரர்களின் வியாபாரம் பாதிக்கபடும். அந்த கடைகளுக்கு வரும் கார், டூவிலர்கள் பத்திரமாக போய் வர வேண்டும் என்பதற்காக கடைகாரர்கள் ஆட்கள் போட்டாலும், டிராபிக் போலீஸ் அவர்களை விட விசுவாசமாக அந்த வியாபாரிகளுக்கு உதவி செய்கிறார்கள். பஸ்களை அங்கு நிறுத்தாமல் தள்ளி நிறுத்த கமிஷன் பார்த்து விடுகிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி விடும் நேரம், வேலைக்கு போய் விட்டு திரும்ப வருபவர்களுக்கு டிராபிக் போலீஸ் செய்வது கஷ்டமாக தான் இருக்கிறது. யாரிடம் போய் சொல்வது என தெரியாமல் தவிக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் போய் கொஞ்ச நேரம் நின்று பார்த்தால், பெரிய பஞ்சாயத்தே நடக்கும் போல சரட்டென வெள்ளை ஜூப்பில் நாவுக்கரசர் , சிங்கம் சூர்யா நினைப்பில் வந்து இறங்கி பஸ்களை மக்கள் ஒதுக்குபுறமாய் வேன்கள் நிற்கும் பகுதியில் நின்றால் கூட, அவர்களை திட்டி அப்றப்படுத்தி கொண்டு இருந்தார். லலிதா ஜூவல்லரி வாசலில் பஸ் எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தி விட கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பஸ் டிரைவரிடம் இங்க தான் பஸ் நிறுத்துகிற இடமா? என்றால், அவர் உடனே டிராபிக் போலீஸ் நாவுக்கரசரிடம் சொன்னார் அவர் , உடனே சார் அந்த பக்கம் போங்கள்? என மிரட்ட ஆரம்பித்தார். அப்ப தான் புரிந்தது, பொதுமக்கள் சொன்னது உண்மை என்று இங்க தான் பஸ் நிற்கும், போர்ட் தொங்க விட்டு இருக்கோம் பாருங்க? என கேரிபோர்ட்டை காட்டினார் தப்பில்லையா? உங்கனால முடிஞ்சத பண்ணிக்கோங்க? என்றார்.. நாவுக்கரசர் கொஞ்சம் வாய் திமராக தான் பேசுகிறார்? இதை கேட்டால் , உங்கனால ஒன்னும் பண்ண முடியாது என்கிறார் இதை திருச்சி காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம் நடவடிக்கை எடுக்கிறார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்

.

.

.

.திருச்சி சுந்தர்

^