​அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிக்கு தினகரன் வச்ச செக்..! . .

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கும் தினகரன் வேட்பாளர்களை அறிவித்து விட்டார் இதில் அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல்ஹமீதுவை அறிவித்து இருக்கிறார் . திமுக சார்பாக செந்தில் பாலாஜியை அறிவிக்கபட்டு விட்டார். செந்தில் பாலாஜி அமமுக இருந்து சமீபத்தில் தான் திமுகவில் போய் சேர்ந்தார் முன்னாள் எம்எல்ஏ வேறு. அவருக்கு சரியான போட்டி கொடுக்க வேண்டும் என்றால் , இஸ்லாமியர்களை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதில் தினகரன் தெளிவாக இருந்தார் இந்த சூழ்நிலையில் அதிமுக சார்பாக இஸ்லாமியர் வேட்பாளர்களை நிறுத்தலாம்? என முடிவு எடுத்தார்கள். அப்படியே இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தினாலும், பாஜகவுடன் கூட்டணி வைத்து இருப்பதால், சிறுபான்மையினர் ஒட்டு போடமாட்டார்கள் என அதிமுக தலைமை தீர்மானித்து விட்டது. வேட்பாளர் தேர்விலும் தயக்கம் காட்டி கொண்டு இருக்கிறது அதிமுக அதிமுகவின் தயக்கத்தை சரியாக பயன்படுத்தி கொண்டார் தினகரன். அரவக்குறிச்சியில் இருக்கும் பள்ளப்பட்டி , அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 60,000 இஸ்லாமிய வாக்குகள் இருப்பதை கருத்தில் கொண்டு சாகுல்ஹமீதை அறிவித்து இருக்கிறார் தினகரன்.

^