கரூரில் திமுக - அதிமுகவினர் இடையே மோதல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கரூரில் திமுக கூட்ணியினர் மற்றும் அதிமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சுமார் 2 பேரின் மண்டை உடைந்துள்ளது.நாளை மறுதினம் தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியினருக்கான பிரச்சாரங்கள் முடிவுப்பெறுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் இன்று கரூரில் திமுக கூட்டணியில் களமறிங்கி உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும் - அதிமுக கட்சியினரும் இன்று கரூர் பேரூந்து நிலையம் அருகே பிரச்சாரத்தை முடிப்பதற்கு திட்டமிட்டு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் தேர்தல் பரப்புரையை முடித்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்ற காரணத்தால் சில மணி நேரத்திற்கு முன்பு இரு கட்சிகளுக்குமான அனுமதியை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்திருந்தார். மேலும் பேரூந்து நிலையம் பகுதியில் பாதுகாப்புக்காக 250 துணை இராணுவப்படையினர் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் கரூர் வெங்கமேடு என்னும் பகுதியில், திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜி, திருச்சி சிவா, ஜோதிமணி ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த விஜயபாஸ்கர் வேட்பாளர் தம்பிதுரைக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது திடீரென இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 2 பேர் மண்டை உடைந்துள்ளது. மேலும் அதிமுகவினர் சென்ற வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கரூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரு கட்சிகளும் கரூர் பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் தற்போது தடை உத்தரவுபிறப்பித்துள்ளார். 

^