​ அதிமுகவிற்கு ஆதரவாக மருதுபாண்டியர் முன்னேற்ற கழகம் பிரச்சாரம் .

மதுரை மருதுபாண்டியர் முன்னேற்ற கழகம் சார்பாக அதன் தலைவர் மணி அவர்கள், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஒபிஎஸ்ஸை நேரில் சந்தித்து, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கும், நடைபெற இருக்கிற இடைத்தேர்தலுக்கும் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது என தெரிவித்தார்கள் 

அதன் படி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மருதுபாண்டியர் முன்னேற்ற கழக தலைவர் மணி, செயலாளர் மோகனகிருஷ்ணன், பொருளாளர் வக்கீல் பாலு மற்றும் நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

^