​நடிகர் கார்த்திக்கை திட்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ..!

 

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து பேச நடிகர் கார்த்திக் பிரச்சாரத்திற்கு கீரைதுறையில் மாலை 5 மணிக்கு வருவார் என நிர்வாகிகளிடம் தெரிவிக்கபட்டது நிர்வாகிகளும் பெண்கள் கும்பலை அதிகமாக கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்எல்ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் 5 மணிக்கெல்லாம் வந்து காத்திருந்தார்கள் நேரமாகி கொண்டே இருந்தது. நடிகர் கார்த்திக் வந்தபாடில்லை? அமைச்சர் அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு போன் அடித்தார். நடிகர் கார்த்திக்கின் பிஏ போனை எடுத்து, இப்ப தான் சார் குளிக்க போய்ருக்கார்? வந்திடுவார்.. என தெரிவித்தார் அட சீக்கிரம் வர சொல்லுப்பா? என அமைச்சர் கடிந்து கொண்டார் வெயில் தாங்க முடியாமல், ரொம்ப நேரம் காத்திருந்தால், 7 மணி வரைக்கும் நடிகர் வராத காரணத்தால், அழைத்து வந்த நிர்வாகிகள் பேச்சையும் மீறி கும்பல் கலைய துவங்கியது அதன் பின்னர் தான் நடிகர் கார்த்திக் வந்து இருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ தன் கோபத்தை வெளிகாட்ட முடியாமல் , கார்த்திக்கை தன் ஆதரவாளர்களிடம் திட்டி இருக்கிறார்.

^