வேட்பாளர் மீது போட்ட வழக்கை தொண்டர்களுக்கு மாற்றி போட்ட அதிகாரிகள் .

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் மரகரம் குமரவேல் பிரச்சாரம் செய்தார். அவர் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் பிரச்சனைகள் வந்தது. மக்கள் கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்? என கேள்விகளை எழுப்பினார்கள் இந்த சூழ்நிலையில், செல்லியம்மன் கோவில் தெருவில் அதிமுகவில் கொடி, தோரணம் என கட்டி மரகதம் குமரவேலை சந்தோஷப்படுத்தி, பிரச்சாரத்திற்கு அழைத்து வந்தார்கள். அவர் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த போது, பிரச்சாரத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் விதியை மீறி தோரணம் , கொடி கட்டப்பட்டு இருப்பதாக மரகரம் குமரவேல் மீது வழக்கு பதிவு செய்தார்கள் பிறகு என்ன நடந்ததோ, அந்த வழக்கை தொண்டர்கள் 3 பேர் மீது மாற்றி போட்டு தேர்தல் அதிகாரிகள் சென்று விட்டார்கள்.

^