​முன்ஜாமீன் பெற்ற கதிர்காமு . .

தேனி மகளிர் காவல் நிலையத்தில் பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது தேனி அருகே சருத்துபட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார் இதனால் இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என கதிர்காமு மதுரை உயர்நீதிமன்றம் சென்று முன்ஜாமின் வாங்கிவிட்டார். இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி உள்ளார். அதேசமயம், கதிர்காமு போன்ற ஒருவர், பெண் ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று கதிர்காமு விளக்கம் அளித்தார். அதிமுகவினர், . இந்த வீடியோவுக்கு பின் சகட்டுமேனிக்கு அமமுகவை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். தேனி மக்களவை தொகுதியிலும், பெரியகுளம் ஆண்டிபட்டி தொகுதியிலும் அமமுகவே உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் அந்த கட்சியின் தொண்டர்களுக்கு இந்த வீடியோ விவகாரம் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தென்மாவட்டங்களில் தங்கள் வெற்றியை தடுக்க சதி நடப்பதாக அவர்கள் குமுறுகிறார்கள். இது தொடர்பாக அமமுக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணை ஏமாற்றிய விவகாரம் தெடர்பாக ஆடியோ ஒன்று வைரலானது. அந்த பெண்ணுடன் அவர் அரவக்குறிச்சியில் தங்கியது உண்மை, பலாத்காரம் செய்தது உண்மை, 7 மாத குழந்தை உள்ளதும் உண்மை என்று நான் சொன்னேன். ஆனால் ஜெயக்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காழ்புணர்ச்சி ஆனால் கதிர்காமு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீதான நன்மதிபப்பை கெடுப்பதற்காக சதி செய்கிறது ஆளும்கட்சி. தென் மாவட்டங்களில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும்கட்சியின் காழ்புணர்ச்சி போலவே எங்களுக்கு தோன்றுகிறது" என்றார். அதிமுக ஒட்டுக்களை மட்டுமல்ல அனைத்து கட்சிகளின் ஓட்டுக்களையும் அமமுக பிரிக்கும் என்பதால் தங்கள் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கப்படுதாகவும், வாக்குகள் பிரிந்து செல்லும் கோபத்தில் இப்படியெல்லாம் புகார்களை கிளப்பிவிடுகிறார்கள் என்றும் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

^