இதெல்லாம் கூட்டணி தர்மமா? .

ஒரு பக்கம் சாருபாலா வெற்றி பெற கூடாது என அமமுக நிர்வாகிகள் செயல்பட்டு கொண்டு இருக்க, மறுபக்கம் சாருபாலாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மறைமுகமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் திமுக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சாருபாலாவிற்கு ஒட்டு சேகரிக்கிறார்கள் விசாரித்ததில், திருநாவுக்கரசர் வெற்றி பெற்றால், மகேஷ் கை ஒங்கி விடும். திருச்சியில் நம்மை டம்மியாக்கி விடுவார்கள் என்கிற கோணத்தில் கே.என்.நேரு , திருநாவுக்கரசருக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் அதற்கு தகுந்தாற் போல், நேரு பெயரை சொல்லும் பத்திரிக்கையாளருக்கு சாருபாலா தரப்பில் இருந்து செம கவனிப்பு நடந்து இருக்கிறது. திமுக நிருபர்களும் சாருபாலாவிற்கு ஒட்டு கேட்கிறார்கள் நொந்து போன திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள், இது கூட்டணி தர்மமா? என்கிறார்கள்.

^