சாருபாலா வெற்றி பெற கூடாது என்பதில் மாவட்ட செயலாளர் கேபிள் சீனி சதி..!

  . திருச்சி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், 8,9,10வது வார்டுகளில் ஒட்டு சேகரிக்க அந்த பகுதிக்கு சாயந்தரம் 4 மணிக்கு சென்று இருக்கிறார் மலைக்கோட்டை பகுதி செயலாளர் முருகன் இரவு 7 மணிக்கு தான் பிரச்சாரத்திற்கு வந்து இருக்கிறார் அதற்குள் சாருபாலா ஒரு தெருவில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க, தூங்கிட்டேன்? என மாவட்ட செயலாளர் கேபிள் சீனிவாசனிடம் சொல்லி விட்டு, போட்டோவிற்கு போஸ் கொடுத்து கிளம்பி விட்டார் முருகன் முருகனை நம்பி பிரச்சாரத்திற்கு போன மக்களுக்கு, கொடுப்பதாக சொன்ன 200 ரூபாய் யாரும் தரவில்லை? பிரச்சாரம் வேற சொதப்பி விட, சாருபாலா கிளம்பி விட்டார் பிரச்சாரத்திற்கு போனவர்கள் நொந்து போய் கேபிள் சீனியிடம் சண்டைக்கு போக, பஞ்சாயத்து பண்ணி 100 ரூபாய்யும், வடை, டீயும் வாங்கி கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் இதில் கேபிள் சீனி, சாருபாலா கூட பிரச்சாரத்திற்கு போவது போல் இருந்தாலும், சாருபாலா ஜெயித்து விட கூடாது என்பதில் கவனமாக செயல்படுகிறார் என்கிறார்கள் அமமுக கழகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாகிகளை செலவழிக்க சொல்லி விட்டு, பணத்தை வெளியே எடுக்க மாட்டேங்கறார்? என்கிற குற்றசாட்டை மாவட்ட செயலாளர் சீனி மீது வைக்கிறார்கள். சாருபாலா வெற்றி கானல் நீர் தானா?

^