30 வயதில் சாதித்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் இடம்பிடித்த நடிகர் விஜய்

தெலுங்கில் சூப்பர் ஹிட் படமான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவர் சர்வதேச அளவில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 30 வயதுக்குள் சாதித்த 30 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சர்வதேச வர்த்தக பத்திரிகைகளில் ஒன்றான ஃபோர்ப்ஸ், பத்திரிக்கை 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா இடம் பிடித்துள்ளார். தெலுங்கில் 'பெல்லி சூப்புலு' திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். அதைத் தொடர்ந்து 'மகாநடி', 'கீதா கோவிந்தம்', 'டாக்ஸிவாலா'என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'நோட்டா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் 30 வயதிற்குள் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

^