ஆண் வேடமிட்டு சிறுமிகளை காதலில் விழவைத்து மோசடி செய்த பெண்'

ஈரோடு அருகே கொடுமுடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தன் உறவுக்காரர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது விஷ்ணுபாலா என்பவரை பார்த்துள்ளார்.அப்போது உறவுக்காரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட விஷ்ணுபாலா, சிறுமியிடம் நட்பாக பழகியதுடன், சிறுமியை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.இதையடுத்து அந்த விஷ்ணு பாலாவும்,அந்த சிறுமியும் வீட்டிற்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.மேலும் அவளது வீட்டிற்கும் சென்று வந்துள்ளார்.இதையடுத்து வீட்டிலிருந்த 15 சவரன் நகை காணாமல் போக, சிறுமியின் பெற்றோர் அந்த பெண்ணிடம் கேட்க அப்போது அவர் தனது காதலனுக்கு கொடுத்து விட்டதாக கூறியுள்ளார் , விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்னையாகி விடும் என்று எண்ணிய அவர்கள், யாருக்கும் சொல்லாமல் யார் அந்த விஷ்ணுபாலாவை தேடி வந்துள்ளனர்.அடுத்த சில நாட்களுக்கு பின்பு மீண்டும் வீட்டிலிருந்து 3 சவரன் நகை காணாமல் போனது.இதனையறிந்த பெற்றோர் அந்த சிறுமியிடம் கேட்க மீண்டும் தன்னுடைய காதலர் வந்தார் என்றும் அவருக்கு அவசர பணத்தேவை என்று கூறியதால் அவரிடம் கொடுத்து விட்டேன் என்று மீண்டும் அப்பெண் கூறியதைக் கேட்ட பெற்றோர் இவ்விவகாரத்தின் விபரீதத்தை உணர்ந்து போலீசில் புகார் கொடுத்தனர்.புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் அந்த சிறுமியை வைத்தே அவரது காதலர் விஷ்ணுபாலாவை மீண்டும் அந்த சிறுமியின் வீட்டிற்கு வரவழைத்தனர். விஷ்ணுபாலாவும் சிறுமியின் வீட்டிற்கு வர, போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியானது.ஆம்,பிடிபட்ட விஷ்ணுபாலா ஆண் வேடமிட்ட காங்கேயத்தை சேர்ந்த சரோஜா என்ற பெண் என்பது தெரியவந்தது.அந்த பெண் சரோஜா பெண்களின் மீது கொண்ட ஆசையின் காரணமாக ஆண் வேடமிட்டு பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து வந்துள்ளார் என்றும்.அதிலும் சிறுமிகளை தான் இவர் அதிகமாகி குறிவைத்து ஏமாற்றுகிறார் என்றும் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.இதையடுத்து சரோஜாவிடமிருந்து 34 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாரி கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது

^