காந்திநகரில் அமித் ஷா போட்டியிட பாஜக தொண்டர்கள் விருப்பம்

குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவை தொகுதியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிட வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.வரும் மக்களவைத் தேர்தலில் காந்திநகர் தொகுதியில் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து, அப்பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்பதற்காக மத்திய பார்வையாளர்களை பாஜக மேலிடம் அனுப்பி வைத்திருந்தது. அவர்கள் நேற்று முன்தினம் கருத்து கேட்டனர். பின்னர் மத்திய பார்வையாளர்களில் ஒருவரான நிமாபென் ஆச்சார்யா கூறும்போது, “காந்திநகர் தொகுதியில் போட்டியிட ஒருவரும் முன்வரவில்லை. அதேநேரம், கட்சித் தலைவர் அமித் ஷா போட்டியிட வேண்டும் என அனைவரும் ஒரே குரலில் விருப்பம் தெரிவித்தனர்” என்றார்.காந்திநகர் தொகுதியின் இப்போதைய எம்.பி.யாக கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளார். இவர் இந்தத் தொகுதியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் (1996 தவிர) தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பிடத்தக்கது.

^