இந்துக்கடவுள்களை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கு

இந்துக்கடவுள்களை அவமதித்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படவிழா ஒன்றில் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் பாரதிராஜா மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். இந்நிலையில் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்றும், அரசியல் சாசன கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கருத்துப் பதிவு செய்ததாகவும் பாரதிராஜா மனுவில் தெரிவிக்கப்பட்டது. இன்றைய விசாரணையின்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்ததையடுத்து, விசாரணை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற அறிவுறுத்திய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்

^