தொகுதி ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக அ.தி.மு.க. தலைமையகத்தில் நேர்காணல் நடைபெற்றது. சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் இன்று நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

^