பாமகவால் தான் தேமுதிக இந்த நிலைமைக்கு ஆளானது..!

  . .

தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துகிறதா? என ஒபிஎஸ்சிடம் கேட்டதற்கு அப்படி ஒன்றும் நடப்பது போல் தெரியவில்லை? என பதிலளித்து விட்டு சென்று விட்டார் தேமுதிகவை இரண்டு திராவிட கட்சிகளும் திட்டம் போட்டு அவமானப்படுத்தி விட்டது என்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள். இருந்தாலும் கேப்டனுக்கு இன்னும் மவுசு இருக்க தான் செய்கிறது. சரத்குமார் தன் கட்சி சார்பாக 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறார். மக்களிடம் செல்வாக்கான தேமுதிக எதற்காக இப்படி திராவிட கட்சிகளிடம் போய் நிற்க வேண்டும். தனித்து போட்டியிடுவோம் என தலைமைக்கு தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது , பிரச்சாரத்திற்க கூட வரவில்லை? ஆனால் வெற்றி பெறவில்லையா? அதே போல் தேமுதிகவும் இந்த முறை தனித்து போட்டியிட்டால் மிக பெரியளவில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கிறார்கள் தொண்டர்கள் தேமுதிகவின் குழப்பத்தில் உற்சாகமாய் இருப்பது பாமக தான். பிரதமர் மோடி வந்த மேடையில் விஜயகாந்தை ஏற்றாமல் கடைசி வரைக்கும் பார்த்து கொண்டார். அப்படி இருந்தால் தான் மோடி, ராம்தாஸ்ஸை புகழந்து தள்ளி விட்டார். இந்த புகழ்ச்சியை வைத்தே, அப்படியே தன் மகனுக்கு மந்திரி பதவி வாங்கி விட திட்டமிட்டு இருக்கிறார்.

^