திருச்சி நேரு & அன்பழகன் லடாய் ..! .

 திருச்சி மாநகர திமுக செயலாளராக இருப்பவர் அன்பழகன். இவர் நேருவின் நெருங்கிய ஆதரவாளர். கடந்த முறை லோக்சபா தேர்தலில் திருச்சியில் அன்பழகன் போட்டியிட, சீட் வாங்கி கொடுத்தவர் நேரு. இந்தமுறையும் தனக்கு தான் சீட் வாங்கி கொடுப்பார் என அன்பழகன் நினைத்து கொண்டு இருந்தார் அப்படி வாங்கி கொடுத்தால் கண்டிபாக வெற்றி பெற்று எம்பியாகி விடலாம் என திட்டமிட்டு இருந்தார் அன்பழகன். ஆனால்,அன்பழகனுக்கு சீட் வாங்கி கொடுக்க நேரு தயக்கம் காட்டி வருகிறார் என்கிறார்கள் இதனால் அதிருப்தியில் இருக்கிறார் அன்பழகன். திமுகவும் கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு தள்ளி விட இருக்கிறது. உடன் பிறப்புகள் திமுகவுக்கு கேட்டு வாங்குங்கள் என நேருவிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால் திருச்சி நேருவின் பேச்சை கேட்டு முடிவு எடுக்கும் நிலைமையிலா தற்போதைய திமுக தலைமை இருக்கிறது என பதிலுக்கு நேருக்கு நக்கலடிக்கிறார் என்கிறார்கள்.

^