​தேமுதிகவிற்கு ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

 . .அனைத்து தொகுதிகளையும் பிரித்து கொடுத்த பின்னால் நேற்று காலையில் ஸ்டாலினிடம் தேமுதிக சார்பாக பேசி இருக்கிறார்கள். அவர் துரைமுருகனை பார்த்து பேச சொல்லி விட்டார். அதன் படி தான் சுதீஷ் மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை சந்தித்த போது, தேமுதிக முக்கிய நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்து பேசி இருக்கிறார்கள் ஸ்டாலின் சொன்ன படி, தேமுதிக முக்கிய நிர்வாகிகள் சந்திப்பை, அப்படியே மீடியாக்களில் போட்டு உடைத்து விட்டார். தற்போது பிரேமலதா, சுதீஷ்சின் திட்டங்களை அம்பலபடுத்த வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் நோக்கம். இப்படி கவிழ்த்து விட்டார்களே? என தேமுதிகவினர் திமுகவின் மீது கடுப்பில் இருக்கிறார்கள் சில பேச்சுவார்த்தைகளை அரசியல் நாகரீகம் கருதி பேசாமல் விட்டு விடுவார்கள். இப்படி துரைமுருகன் அம்பலபடுத்தியது.. தேமுதிக இனி திமுகவுடன் கூட்டணி வைக்காது ? என்பதும், தேர்தல் களத்தில் திமுகவிற்கு எதிராக செயல்பட திட்டமிட்டு இருக்கிறது என்பதும் தேமுதிக வட்டாரங்களில் தெரிகிறது..

^