பெண் வேடத்துக்கு மாறிய பரத்

ஹீரோக்களுக்கு மவுசு குறையும் காலகட்டங்களில் பெண் வேடத்தில் நடித்தால் மீண்டும் மார்க்கெட் பிக்அப் ஆகும் என்று கோலிவுட்டில் சென்டிமென்ட் உண்டு. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பெரும்பாலான ஹீரோக்கள் பெண் வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களில் பலருக்கு கோலிவுட் சென்டிமென்ட் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. தற்போது நடிகர் பரத்தும் அதே சென்டிமென்ட்டுக்குள் வந்திருக்கிறார். ‘பொட்டு’ படத்தில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார் பரத். இப்படம்பற்றி அதன் இயக்குனர் வடிவுடையான் கூறும்போது,’மருத்துவ கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக பொட்டு உருவாகியிருக்கிறது. ஹீரோ பரத். இவர், பெண் வேடத்திலும் நடித்திருக்கிறார். அதற்காக தனது உடல்மொழியை மாற்றி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் ஆயிரம் தியேட்டரில் இப்படம் ரிலீஸ் ஆகிறது. நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஹீரோயின்களாக நடித்துள்ளனர். தம்பி ராமையா, ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பு. அம்ரீஷ் இசை’ என்றார்

^