கவர்ச்சி சகோதரிகள்

கோலிவுட்டில் ராகினி, பத்மினி, அம்பிகா, ராதா என அக்கா, தங்கை நடிகைகள் வலம் வந்திருக் கின்றனர். இளம் தலைமுறையில் ராதாவின் மகள் கார்த்திகா, துளசி, கமல் மகள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா சகோதரி நடிகைகளாக களம் இறங்கினர். அந்த வரிசையில் துல்கர் சல்மான் நடித்த சோலோ படத்தில் ஹீரோயினாக நடித்த நேஹா சர்மா தனது தங்கை அயிஷா சர்மாவை திரையுலகுக்கு அழைத்து வருகிறார். நடிக்க வந்தால் உடல் தோற்றத்தை எப்படி கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் தந்திருப்பதுடன் கவர்ச்சியாக நடிக்கவும் தயங்கக் கூடாது என்ற திரையுலக யதார்த்தத்தையும் புரிய வைத்திருக்கிறார். தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் நேஹா, தன்னுடன் அயிஷா சர்மாவையும் உடற் பயிற்சி செய்ய அழைத்துச் சென்றுவிடுகிறார். சமீபத்தில் உடற்பயிற்சி முடித்துவிட்டு ஜோடியாக நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். அந்த படத்தை வெளியிட்டு எங்களது ஜோடிபொருத்தம் எப்படி என்று கேட்டிருக்கிறார். இரண்டு அழகு தேவதைகள் என்று நேஹா, அயிஷாவை ஒரு சிலர் வர்ணித்திருக்கின்றனர். இன்னும் சிலர், கவர்ச்சியில் ஒருவருக்கொருவர் சளைத்ததுபோல் தெரியவில்லை என கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர். தான் மட்டுமல்ல தனது தங்கையும் கவர்ச்சி கதாநாயகியாக நடிக்க தயாராகிவிட்டார் என்று உணர்த்தியிருக்கும் நேஹா, பொருத்தமாக கதை வந்தால் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

^