​வடமாவட்ட காவல்துறையினருக்கு பாமக உதவுமா?

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்து விட்டது. அதனால் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்? என வடமாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு இறந்த போது, வடமாவட்டங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பஸ்கனை அடித்து நொறுக்கினார்கள். பல பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது போலீஸ் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகபடும் நபர்களை கைது செய்யவில்லை? என அந்த பகுதியை சேர்ந்த எஸ்.ஜ, இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி உட்பட பலரின் பதவி உயர்வை ஒரு வருஷத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறது அரசு தற்போது தான் பாமக அதிமுக உடன் கூட்டணி வைத்து விட்டதால், இனி நம்ம பிரச்சனை தீர்க்கபடும்? என அதை பாமக மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் பாமக அமைதி காக்கிறது.

^