​ திரும்பவும் அரவக்குறிச்சி அதிமுக பக்கம் வருமா? .

. .

கரூர் அரவக்குறிச்சி சட்டமன்றத்தில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த தொகுதியில் கடந்த முறை செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். தற்போது அவர் திமுக பக்கம் போய் விட்டார் அதனால் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த தொகுதியை அதிமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் அதற்காக நஞ்சை, புகளூர் பகுதியில் 1 டிஎம்சி தண்ணீரை தேங்கி வைக்கும் கதவணை கட்டி கொடுத்து இருக்கிறார்.220 கோடிக்கு குடிநீர் திட்ட பணிகளை செய்து இருக்கிறார் சாலைவசதி, கால்வாய் வசதி என அந்த தொகுதிகளுக்கு நிறைய சலுகைகளை அளித்து வந்து இருக்கிறார் அத்துடன், அந்த தொகுதியில் இருக்கும் பெண் வாக்காளர்களை கவர சேலை வழங்கி கொண்டு இருக்கிறார். சில இடங்களில் சேலைகள் வழங்கபட்டு விட்டது. சில இடங்களில் டோக்கன்கள் கொடுக்கபட்டு விட்டன.

^