​வீரமணி வீட்டில் ரெய்டுக்கு காரணம் முதல்வர் எடப்பாடி . .

 . 

பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு அமைச்சர வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது அமைச்சர் வீரமணியை டார்கெட் பண்ணி ரெய்டு நடக்க முக்கிய காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் என்கிறார்கள் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் தேர்தல் செலவுகளை வீரமணியை செய்ய சொல்லி எடப்பாடி அழுத்தம் கொடுத்து இருக்கிறார் தன்னிடம் பைசா காசு இல்லை? வேண்டுமானால் என் சகோதர் கே.சி.அழகிரிக்கு சீட் கொடுத்தால், அவர் நிற்கும் தொகுதியில் மட்டும் செலவு செய்கிறேன் என சொல்லி இருக்கிறார் தம்பிதுரை பாஜக கூட்டணியை வெளிப்படையாக எதிர்த்தாலும், அமைச்சர்கள் வீரமணியும், சி.வி.சண்முகமும் உள்ளே எதிர்த்து வந்தார்கள். கடந்த முறை பாஜக சார்பாக போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை தோற்கடிக்க எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறேன். அவர்களுடன் கூட்டணி வைத்தால், அதிமுக அழிந்து விடும் என விவாதம் செய்து இருக்கிறார்கள் அதே போல் அதிமுகவில் இருந்து தினகரன் அணிக்கு போன 3 எம்எல்ஏகள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான் வீரமணியின் போக்கு பிடிக்காமல் தான் அவர்கள் டிடிவி அணிக்கு போனார்கள் என்பதால், வீரமணி வீட்டில் ரெய்டு நடந்து இருக்கிறது என்கிறார்கள் ரெய்டு நடத்தி வீரமணியை வழக்கு, சிறை எனஅனுப்பி விட்டு, முனுசாமியை அமைச்சராக்க முயற்சி செய்கிறார் எடப்பாடி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

^